விரும்பிய பெண்ணே காதலிக்கவில்லை: மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை...!


விரும்பிய பெண்ணே காதலிக்கவில்லை: மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை...!
x

ஆரல்வாய்மொழி அருகே காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பொட்டல் விளையை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் பிரகாஷ்(வயது 32). இவர் மரவேலை செய்து வருகிறார். தினமும் அகஸ்தீஸ்வரம் ஊருக்கு போய் வேலை செய்து வருவது வழக்கம். இவர் வெள்ளமடம் பகுதியிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி அந்த பெண், பிரகாஷிடம் நான் உன்னை காதலிக்கவில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. தான் விரும்பியவள் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டாளே என்ற நிலையில் மனம் உடைந்த பிரகாஷ் வெள்ளமடம் ஜங்சன் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

பின்னர், உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பிரகாஷ் பரிதாபமா உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..


Next Story