பெண்சிசு கிணற்றில் வீசி கொலை


பெண்சிசு கிணற்றில் வீசி கொலை
x

களக்காடு அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண்சிசு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண்சிசு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (23). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்து, சில நாட்களில் இறந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் கர்ப்பமான இசக்கியம்மாளுக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை மாயம்

நேற்று அதிகாலையில் ரமேஷ் சவாரிக்காக சேரன்மாதேவிக்கு சென்றுவிட்டார். இதனால் இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இசக்கியம்மாள் திடீரென்று விழித்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக தனது கணவர் ரமேசுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆட்டோவில் திரும்பி ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

பிணமாக கிடந்த சிசு

சேரன்மாதேவி அருகே வந்தபோது ஆட்ேடா கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயம் அடைந்த ரமேஷ் உயிர்தப்பி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு பதறியபடி வீட்டிற்கு வந்தார்.

அவர் தனது உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடினார். ஆனால், கண்டுபிடிக்கமுடியவில்லை. இறுதியில் ஊரில் உள்ள கிணற்றில் பார்த்தபோது, அங்கு ெபண் சிசு பிணமாக கிடந்தது. இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், குழந்தை பிணமாக கிடந்த கிணறு மற்றும் வீட்ைட பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கிணற்றில் வீசி கொலை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இசக்கியம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வந்தார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று அதிகாலையில் ரமேஷ் வெளியே சென்ற பின்னர், இசக்கியம்மாள் தனது குழந்தைைய தூக்கிக் கொண்டு வெளியே சென்றுள்ளார். ஊரில் உள்ள கிணற்றில் குழந்தையை வீசிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் குழந்தையை காணவில்லை என்று தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கிணற்றில் கிடந்த தண்ணீரில் மூழ்கிய குழந்தை துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளது. மீன்கள் கடித்ததில் குழந்தையின் முகத்தில் காயங்களும் இருந்தது.

மேலும் கடந்த 2021-ம் ஆண்டு இசக்கியம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 20 நாட்களில் அந்த குழந்தையும் தொட்டிலில் பிணமாக கிடந்துள்ளது. எனவே, அந்த குழந்தையையும் இசக்கியம்மாள் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தாயிடம் விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கியம்மாளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிறந்து 7 நாட்களே ஆன பெண்சிசு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story