நள்ளிரவில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


நள்ளிரவில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் நள்ளிரவில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

கடலூர்

சிதம்பரம்

நள்ளிரவில் திருமணம்

காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்(வயது 28). இவருக்கும், சிதம்பரம் கோவிலாம்பூண்டி எம்.எம்.ஐ. நகரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து நள்ளிரவில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் சிறுமியின் திருமணம் குறித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்- இன்ஸ்பெக்டர் பொன்மகரம் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

போலீசாரின் தீவிர விசாரணையில் சதீஷ் மற்றும் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார் பெண்ணின் பெற்றோருக்கு போதிய அறிவுரைகளை வழங்கினர். தொடாந்து சிறுமியை சிதம்பரத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

பின்னா் நேற்று காலை பரங்கிப்பேட்டை சமூக விரிவாக்க அலுவலர் மீனா முன்னிலையில் சிறுமியை ஆஜர் படுத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை அங்கிருந்து கடலூர் அரசு காப்பகத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story