தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன


தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன
x

தலைவாசல் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன.

சேலம்

தலைவாசல்

தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஆடுகளுக்கு தீனி வைப்பதற்காக சென்றபோது தோட்டத்தில் கட்டியிருந்த 5 ஆடுகளை நாய்கள் கடித்து செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரசு கால்நடை டாக்டர் சக்திவேல் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். தெருநாய்கள் கடித்து ஆடுகள் செத்த சம்பவம் அந் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story