அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்
x

வடகாடு சுற்று வட்டார பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

வடகாடு:

நெல் கொள்முதல் நிலையம்

வடகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிக அளவில் கோடை கால குறுவை நெல் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது. ஆழ்குழாய் கிணறு பாசனம் மூலமாக பயிரிடப்பட்டு நெல் அறுவடை பணிகளில் தற்சமயம் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களது வயல்களில் அறுவடை செய்த நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தங்களது வீடுகள் மற்றும் விவசாய தோட்டங்களில் குவித்து வைத்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் ஒருசில நேரங்களில் அவ்வப்போது பெய்யும் மழையால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை தார்ப்பாய்களை கொண்டு மூடி பாதுகாக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகள் வேண்டுகோள்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உரிய காலத்தில் திறக்கப்படாத பட்சத்தில் தனியார் நெல் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு நெல் மணிகளை விற்பனை செய்யக்கூடிய சூழல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story