பஞ்சாலைகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும்-ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் வலியுறுத்தல்


பஞ்சாலைகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும்-ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் வலியுறுத்தல்
x

பஞ்சாலைகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சிவகங்கை


பஞ்சாலைகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மாவட்ட மாநாடு

சிவகங்கை மாவட்ட ஏ.ஐ.டியு.சி. மாவட்ட மாநாடு சிவகங்கையில் ரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. ராஜா வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன். மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் மீனாள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கோபால், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நா.சாத்தையா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், மனவழகன், காளைலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிராபைட் தொழிற்சாலை

சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியத்திற்காக காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு உடனே ஓய்வூதியம் வழங்கிடவேண்டும். உச்சநீதிமன்றம் கூறியது போல ஒப்பந்த தொழிலாளர் முறையை அகற்ற வேண்டும். நிரந்தர தொழிலாளர்களை அரசு நியமிக்க வேண்டும்.

உள்ளாட்சி சுகாதார பணியாளர்கள் மனித கழிவை மனிதனே எடுக்கும் கொடுமையை தடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி நகராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை தொழிலாளர்களுக்கு அரசு ஆணை-62ன் படி குறைந்த பட்சம் ஊதியம் வழங்க வேண்டும். ஆட்டோ மற்றும் வாகனங்களுக்கு எப்.சி. கட்டணத்தை குறைக்க வேண்டும். இன்சூரன்ஸ் ெதாகையை குறைக்க வேண்டும்.

பஞ்சாலைகளை மூடுவதை கைவிட வேண்டும்

ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்பும் பங்குகள் 24 மணிநேரமும் இயங்க வேண்டும். பஞ்சாலைகளை இழுத்து மூடுவதை அரசு கைவிட வேண்டும். பஞ்சாலை தொடர்ந்து இயங்க அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும்.நடைபாதை வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர செயலாளர் சகாயம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story