முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்டு ரசித்த கவர்னர்


முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்டு ரசித்த கவர்னர்
x

முதுமலை வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்டு ரசித்த கவர்னர்

நீலகிரி

கூடலூர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக கேரள மாநிலம் வயநாட்டுக்கு சென்று திரும்பினார். தொடர்ந்து முதுமலையில் வன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஊட்டிக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை மீண்டும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு குடும்பத்தினருடன் வந்தார். அவரை வனத்துறையினர் வரவேற்று வாகனத்தில் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை கவர்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். பின்னர் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வந்து வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளை வழங்கி மகிழ்ந்தார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையை ஒட்டி முதுமலையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


Next Story