தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்


தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்
x

தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினார்.

விருதுநகர்


விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் தலைமையில் விருதுநகரில் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடைபெறுகிறது. மக்கள் நலனுக்காக இந்த அரசு இயற்றியுள்ள சட்டங்களுக்கு கவர்னர் இசைவு தராமல்மறுக்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம், நீட் தேர்வு விலக்கு கோரும் தீர்மானம், பல்கலைக்கழக சட்டங்கள் ஆகியவற்றிற்கு கவர்னர் இசைவுதர தர மறுக்கும் நிலை தொடர்கிறது. சட்டசபையில் கவர்னர் உரையாற்றும் போது அனைத்து கட்சியினரும் எதிர்க்குரல் எழுப்பினோம். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டங்களை அவர் கிடப்பில் போடக்கூடாது. எனவே அவர் இனியும் தாமதிக்காது மக்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகி சிவகுருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story