தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் கவர்னரின் செயல்பாடு உள்ளது


தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் கவர்னரின் செயல்பாடு உள்ளது
x

தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் கவர்னரின் செயல்பாடு உள்ளது என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் கவர்னரின் செயல்பாடு உள்ளது என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

தி.க. பொதுக்கூட்டம்

திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்கவுரை பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வெற்றிவேந்தன் வரவேற்று பேசினார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் கிருஷ்ணேஸ்வரி, மாவட்டத் துணைத்தலைவர் நல்லபெருமாள், அமைப்பாளர் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் ஆட்சியை விட தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி சிறந்தது. திராவிடர் கழகத்தின் கொள்கை சமூக நீதி ஆகும். மருத்துவத் துறையில் தமிழகத்தின் வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட மேலோங்கி உள்ளது.

கவர்னரின் செயல்பாடு...

33 மாநிலங்களில் 655 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் இளநிலை மருத்துவ படிப்பும், மருத்துவ கல்லூரிகளும் அதிகம் இருப்பது தமிழகத்தில் தான். நீட் தேர்வு என்ற ஒன்றை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது.

சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் திராவிட மாடல். தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் கவர்னரின் செயல்பாடு உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமான தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கிறது. அதனை தடை செய்யும் மசோதாவை தமிழக கவர்னர் இன்றளவும் நிறைவேற்றவில்லை.

சேது சமுத்திர திட்டம்

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என கூறி பா.ஜனதா வாக்குறுதிகள் அளித்து மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால் இன்றளவிலும் எந்த வாக்குறுதியையும் பா.ஜனதா நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டன. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. சேதுசமுத்திர திட்டத்தை கொண்டு வந்தால் தென் கிழக்கு ஆசியாவின் முதன்மை திட்டமாக இருக்கும்.

இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்தரபோஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story