மூதாட்டி வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


கயத்தாறு அருகே மூதாட்டி வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே பன்னீர்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது 80). இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வயலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், முத்தம்மாளின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து திறந்து பார்த்தனர். ஆனால் அதில் நகை, பணம் இல்லை. இதையடுத்து அங்கு படுக்கை அறையில் பிளாஸ்டிக் டிரம்மில் பாத்திரங்களுக்கு இடையே வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த முத்தம்மாள் நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story