முப்பெரும் விழா


முப்பெரும் விழா
x

திருப்புவனத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா, மிசா தென்னவன் நினைவேந்தல் விழா, பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்கள் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைத்தலைவர் செந்தில்ராஜ் வரவேற்றார்.

கூட்டத்திற்கு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கி பேசியதாவது:-

நமது சமுதாய மக்கள் குரு பூஜைகளுக்கு வந்துவிட்டு பசியோடு திரும்பி செல்ல கூடாது என காளையார்கோவில், பசும்பொன் கிராமத்தில் தனித்தனியாக ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்தப் பணியை கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம்.

மாமன்னர் மருதுபாண்டியர்கள், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய ஆன்மிக தலைவர் தேவர் திருமகனார் ஆகியோரது குரு பூஜைகளுக்கு போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அரசு நீக்க வேண்டும். வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கவேண்டும். விரைவில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநில நிர்வாகிகள் சுந்தரசெல்வி, விப்ராநாராயணன், நடராஜன், முத்துநாகராஜன் உள்பட பலர் பேசினார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் கட்சியினர் செய்திருந்தனர். முடிவில் நகர்செயலாளர் விஜய் வணங்காமுடி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story