பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம்


பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம்
x

பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

துர்நாற்றம்

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றிலும் கருவூலம், இ-சேவை மையம், குடிமைப்பொருள் தாசில்தார் அலுவலகம், சிறைச்சாலை, சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இதனால் இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கைக்கு தகுந்த அளவு பொது கழிப்பிட வசதி இல்ைல. தாலுகா அலுவலகத்தின் எதிரே இருக்கும் ஒரேயொரு கழிப்பிடத்தை தான் அனைவரும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் அவதி

இதேபோன்று இங்கு மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிடமானது பல மாதங்களாக பூட்டி கிடக்கின்றது. இதனால் இங்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக பூட்டி கிடப்பதால் சுற்றிலும் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. எனவே, இதை விரைவில் திறப்பதற்கும், பயன்பாட்டில் இருக்கும் கழிப்பிடத்தை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்வார்களா?.



Next Story