லஞ்சம் தராததால் செவிலியர் பிரசவம் பார்த்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம் உறவினர்கள் சாலைமறியல்
லஞ்சம் தராததால் செவிலியர் பிரசவம் பார்த்த பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதனால் தவறான சிகிச்ைச அளித்ததாக செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லஞ்சம் தராததால் செவிலியர் பிரசவம் பார்த்த பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதனால் தவறான சிகிச்ைச அளித்ததாக செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரசவத்துக்காக அனுமதித்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 26). இவரது மனைவி சுசிசந்திரகா (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக கடந்த 31-ந் தேதி உதயேந்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிரசவத்தின்போது டாக்டர்கள் இல்லை எனவும் பணியில் இருந்த செவிலியரே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பு ஏற்பட்ட நிலையில் செவிலியர் ரூ.2 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டதாகவும், சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் சமயத்தில் சதையை கத்தரித்து குழந்தையை வெளியே எடுத்து பின்னர் தையல் போட்டுள்ளனர்.
அதன்பின் சேயுடன் திரும்பிய சுசிசந்திரிகாவுக்கு இருதினங்களுக்கு பிறகு தையல் பிரிந்ததால் அவரது உடல் நிலை மோசமானது.
இதனையடுத்து அவரை மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றபோது அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேல் சிகிச்சை
பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சை பெற்ற சுசிசந்திரிகா மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் உடல் நிலை கவலைக்கிடமானதாக இருந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த நிலையில் டாக்டர்கள் இல்லாமல் பிரசவம் பார்த்த செவிலியர், சுகப்பிரசவம் ஏற்பட இருந்த நிலையில் ரூ.2 ஆயிரம் கொடுக்காததால் சதையை பிரித்து தையல் போட்டதே சுசிசந்திரகா உடல்நிலை ஆபத்தானதற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதனைடுத்து ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுசிசந்திரகாவின் உறவினர்கள் வாணியம்பாடி - கைலாசகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டு அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக வாணியம்பாடி கிராமிய போலீசார், தாசில்தார் சம்பத் தலைமையில் வருவாய்த் துறையினர,் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.