மலைப்பகுதியில் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டம்


மலைப்பகுதியில் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டம்
x

மலைப்பகுதியில் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மலைப்பகுதியில் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

தொடர் போராட்டம்

வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை ராம்நகர் மலைவாழ் மக்கள் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக மலைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று வத்திராயிருப்பு தாசில்தார் முத்துமாரி மலைப்பகுதிக்கு சென்று தாலுகா அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வரும் படி கூறினார். இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் சிவகாசி சப்-கலெக்டர் விஸ்வநாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கடை வைக்க அனுமதி

கோவிலுக்கு அனுமதிக்கப்படும் விசேஷ நாட்களில் மலைப்பாதையில் கடை வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

மாடுகளை மலைப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆதலால் மீண்டும் போராட்டம் தொடர போவதாக கூறி விட்டு மலைவாழ் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப் குமார் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த பேச்சுவார்த்தையில் வத்திராயிருப்பு தாசில்தார் முத்துமாரி, ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சுந்தர மகாலிங்கம் கோவில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், ரேஞ்சர் பிரபாகரன், வனவர்கள் ஜெய்சங்கர், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story