இந்து மக்கள் கட்சியினர் திடீர் சாலை மறியல்
இந்து மக்கள் கட்சியினர் திடீர் சாலை மறியல்
கோயம்புத்தூர்
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அனுமதியின்றி நேற்று காலை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு வந்து சாலையில் அமா்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசாா் அவர்களிடம், ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்த அனுமதியில்லை, எனவே கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து அர்ஜூன் சம்பத் உள்பட 51 பேரை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story