தூய மார்க் ஆலய பிரதிஷ்டை பண்டிகை தொடங்கியது


தூய மார்க் ஆலய பிரதிஷ்டை பண்டிகை தொடங்கியது
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மார்க் ஆலய பிரதிஷ்டை பண்டிகை தொடங்கியது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மாற்கு ஆலயத்தின் 175-வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசனப் பண்டிகை நேற்று தொடங்கியது.

விழா தொடக்கம்

உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மார்க் ஆலயத்தின் 175-வது பிரதிஷ்டை மற்றும் அசனபண்டிகை விழா நேற்று மாலையில் ஜெயபவனியுடன் தொடங்கியது. பரிபாலனர் ஞானராஜ் கோயில் பிள்ளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சேகர உபவாசக கூடுகை, இரவு 7 மணிக்கு வட இந்திய மிஷனரி கலாசார நிகழ்ச்சிகள், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருவிருந்து ஆராதனை, காலை 11.30 மணிக்கு வாலிப பெண்கள் பண்டிகை, இரவு 7 மணிக்கு சபையார் கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு நடக்கிறது.

பிரதிஷ்டை பண்டிகை

வருகிற 23-ந்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களும் தினமும் இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா, 26-ந் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தின கொடியேற்று விழா, 11 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனை, 27-ந் தேதி காலை 8 மணிக்கு மிஷினரி விற்பனை விழா, மாலை 6 மணிக்கு ஆயத்த ஆராதனை, 28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு 175-ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து தங்க நாணயங்கள், சிறப்பு மலர்கள் வெளியீடு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு வான வேடிக்கை, 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, நண்பகல் 12 மணிக்கு வேத பாட தேர்வு, மாலை 4 மணிக்கு ஞானஸ்தான, ஆராதனை, இரவு 7 மணிக்கு தியாக சுடர் என்ற வரலாற்று நாடகம் நடைபெறும்.

ஏற்பாடுகளை சேகரகுருவானவர் பாஸ்கர் அல்பட்ராஜன் கவுரவ குருவானர் ஷீபா பாஸ்கர், உதவி குருவானவர் ஜெபத்துரை, சபை ஊழியர் ஆனந்த மணி, பரிபாலனர் ஞான்ராஜ் கோவில் பிள்ளை, தலைவர் பால்ராஜ் செயலாளர் பிரின்ஸ் பொருளாளர் ஜெபஸ்டின் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் ஆண்ட்ரூஸ் மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story