காப்பக உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மாணவியிடம் சில்மிஷம் செய்த வழக்கில் கைதான காப்பக உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நாகை புதிய கடற்கரை சாலையை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது52). இவர் தனது மனைவியுடன் சேர்ந்து குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் தங்கி படித்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி, காப்பக உரிமையாளர் பரமேஸ்வரன் தன்னை தனி அறைக்கு அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக ெதரிவித்திருந்தார்.அதன்பேரில், நாகை அனைத்து மகளிர் போலீசார், பரமேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நிலையில், பரமேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்,கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் அருண் தம்புராஜ், பரமேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் . அதன்பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து நாகை அனைத்து மகளிர் போலீசார், நாகை மாவட்ட சிறையில் இருந்த பரமேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.