வீடு தீயில் எரிந்து நாசம்


வீடு தீயில் எரிந்து நாசம்
x

வீடு தீயில் எரிந்து நாசமானது.

கரூர்

அரவக்குறிச்சி அருகே இசட்ஆலமரத்துப்பட்டி கோட்டையூர் காந்திநகரை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி மகேஸ்வரி. இருவரும் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றிருந்தனர். அப்போது இவர்களது சிமெண்டு ஓடு மற்றும் கூரையால் அமைக்கப்பட்டிருந்த வீட்டில் தீப்பற்றி எரிவதாக பக்கத்து வீட்டுக்காரர் தகவல் தந்துள்ளார். இதனையடுத்து இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு எரிந்திருந்தது. இதனையடுத்து மகேஸ்வரியின் புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story