பஞ்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
பஞ்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை
காளையார்கோவில்,
காளையார்கோவிலில் உள்ள ஒரு பஞ்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பஞ்சாலை முன்பாக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் நீண்ட நாளாக மூடிக்கிடக்கும் பஞ்சாலையை இயக்கிட வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்கிட வேண்டும், தேசிய பஞ்சாலையை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை கோஷங்களை முழங்கி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து சங்கத்தையும் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story