உடலுறவுக்கு வர மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்...!
உறவுக்கு மறுத்த மனைவியைக் கொன்ற கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை,
சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்த சீனிவாசன் அம்மு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.அம்முவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதை சீனிவாசன் கண்டித்த போதிலும் அம்மு கேட்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சீனிவாசன் உறவுக்கு அழைத்த போது அம்மு வர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது... மேலும், தனக்கு பழக்கம் உள்ள அந்த உறவினருடன் மட்டும் தான் உறவு வைத்துக் கொள்ள முடியும் என அம்மு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் அம்முவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சீனிவாசனுக்கு 10 ஆண்டு கால சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள