இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு பேரணியுடன் தொடங்கியது
கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு பேரணியுடன் தொடங்கியது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இளைஞர்களின் லட்சிய பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் சங்க கொடி மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்து இருந்தனர். கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு இருந்து புறப்பட்ட இந்த பேரணி நான்குமுனை சந்திப்பு, சேலம்மெயின் ரோடு வழியாக அண்ணா நகர் திருமண மண்டபம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையை சென்றடைந்தது.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாநில தலைவர் ரிஜிஸ்டர் குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை வரவேற்றார். அகில இந்திய தலைவர் ரஹீம் எம்.பி., வெங்கடேசன் எம்.பி, அகில இந்திய பொதுச் செயலாளர் ஹிமக்னராஜ், மாநில செயலாளர் பாலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். இதில் மாநில பொருளாளர் தீபா, மாநில இணைச்செயலாளர் பாலசந்திரபோஸ், துணைத்தலைவர் கார்தீஸ்குமார், இணை செயலாளர் சிங்காரவேலன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.