கீழே விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு


கீழே விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
x

கீழே விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

திருவாரூர்

நீடாமங்கலம் போலீஸ் சரகம் பூவனூர் தட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது45). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story