"சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்" - அமைச்சர் ரகுபதி


சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம் - அமைச்சர் ரகுபதி
x

சிறைசாலைகளில் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிறைசாலைகளில் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சிறைசாலைகளில் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைத்து மாவட்ட சிறைச்சாலைகள், பெண்கள் சிறைசாலை உள்ளிட்ட 13 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணியும், சிறையில் பணியில் இருக்கும் காவலர்களின் உடையில் கேமரா பொருத்தப்படும். அதன்மூலம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியை உருவாக்கி அனைத்து சிறைகளையும் கண்காணிப்பில் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது 8 சிறைசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Next Story