சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது


சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது
x

சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை சக்தி விநாயகர் தெருவை சேர்ந்த கண்ணனின் மகன் கவியரசன்(வயது 24). கூலி தொழிலாளியான இவர், 17 வயதுடைய ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கவியரசனை பிடித்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் கவியரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story