கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி


கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகாவின் தலைமை அரசு ஆஸ்பத்திரி, மேல்கூடலூரில் செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் 20 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு ஆட்டுக்குட்டி ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றுக்குள் தவித்து கொண்டு இருந்த ஆட்டுக்குட்டியை வலை மற்றும் கயிறு மூலம் பாதுகாப்பாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story