பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டது
பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு
பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலை ரூ.143.83 கோடி மதிப்பில் 30.057 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் தெற்கு புறவழிச்சாலையை இணைக்கும் பகுதியில் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
இந்தநிலையில் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.
நிலம் கையகப்படுத்தப்பட்டது
அதனை தொடர்ந்து சாலைக்காக அளவெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள நிலத்தை நேற்று மாலை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பெரம்பலூர் போலீசார் பாதுகாப்புடன் கையகப்படுத்தினர். முன்னதாக அந்த நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் அறுவடை செய்யப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட அந்த நிலத்தில் விரைவில் சாலை அமைக்கப்பட்டு பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.