வக்கீல் திடீர் உண்ணாவிரதம்


வக்கீல் திடீர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல் திடீர் உண்ணாவிரதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் புத்தேரி பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 45), வக்கீல். இவர் நேற்று காலை வக்கீல் உடையுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் திடீரென அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி போராட்டம் நடத்தினார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சாம்ராஜ் கூறுகையில், எனது தாய்க்கு சொந்தமான நிலம் வடசேரி புத்தேரி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு அதிகாரி ஒருவர் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டார். எனவே அந்த பட்டா மாற்றத்திற்கான போலி ஆவணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தகைய மோசடியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story