வீட்டு நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை


வீட்டு நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை
x

குடியாத்தம் அருகே வீட்டுநாயை சிறுத்தை கடித்து கொன்றது.

வேலூர்

குடியாத்தம் அருகே வீட்டுநாயை சிறுத்தை கடித்து கொன்றது.

சிறுத்தைகள் நடமாட்டம்

குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது. தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம், தேவரிஷிகுப்பம், மயிலாடும்மலை, மேல்மாயில், பரதராமி அடுத்த கொட்டாளம் வனப்பகுதி, டி.பி.பாளையம், கொத்தூர், தனகொண்டபல்லி, சைன குண்டா, மோர்தானா, கொட்டாரமடுகு உள்ளிட்ட பகுதிகளில் 6 ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நாயை கடித்து கொன்றது

இதனால் வனத்துறையினர் கிராமங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்தநிலையில் தோனிகான் பட்டி பகுதியில் முனிரத்தினம் என்ற விவசாயி வீடு நிலத்தில் இருப்பதால் பாதுகாப்பிற்காக வீட்டில் நாய்களை வளர்த்து வந்துள்ளார். இரவு நேரங்களில் சிறுத்தைகள் இவர் வீட்டுக்கு அருகே வருவதாகவும், அப்போது நாய்கள் குரைக்குமாம். அதன்படி நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு சிறுத்தைகள் உலா வருகிறது என இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது இதனால் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது நாயை சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்றது தெரியவந்தது.

உடனடியாக சத்தம் போட்டபடி சென்றபோது நாயின் கழுத்துப் பகுதியில் சிறுத்தை கடித்து கொன்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் நாயை சிறுத்தை கொன்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தைகள் நாயை இழுத்துச் சென்ற சம்பவத்தால் வனப்பகுதியை ஒட்டியபடி வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story