விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

தென்காசி புதிய பஸ் நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வர்கீஸ் தலைமையில் இலவசமாக மனுஸ்மிருதி புத்தகத்தினை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் நெடுவை மூர்த்தி, பாக்யராஜ், வடகரை செயலாளர் ஸ்ரீபால், அச்சன்புதூர் செயலாளர் முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இதற்கு அனுமதி அளிக்கப்படாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


Next Story