விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தகாத முறையில் பேசியதாகக் கூறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை கண்டித்து அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகர செயலாளர் அப்பல்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென அர்ஜூன் சம்பத்தின் உருவப்பொம்மையை எரித்தபோது, அவர்களை‌ போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story