தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமையில் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர். கட்சி நிர்வாகிகள் இடிமுரசு, அமுதா இனியன், அமுததுரை அரசன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கண்ணன்மேடு தலைக்காடு கிராமத்தில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் உடனடியாக கட்டிக்கொடுக்க வேண்டும். புதிய வீடுகள் கட்டும் வரையில் தற்போது வசித்து வரும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story