ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் பொருட்கள் திருட்டு


ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் பொருட்கள் திருட்டு
x

ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் பொருட்கள் திருட்டு போனது.

திருச்சி

திருச்சி பெரிய கடை வீதி முத்தழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 57). இவர் கள்ளத்தெரு பகுதியில் வீடியோ ஆர்ட்ஸ் என்ற பெயரில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்கு சென்றுபார்த்தபோது, 2 கேமராக்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போய் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story