விபத்தில் லாரி டிரைவர் பலி
குஜிலியம்பாறை அருகே விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் பலியானார்.
குஜிலியம்பாறை அருகே உள்ள கருத்தக்காபட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 34). லாரி டிரைவர். இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் குஜிலியம்பாறைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லப்பட்டி பிரிவு என்ற இடத்தில் அவர் வந்தபோது, அந்த வழியாக வேடசந்தூரில் இருந்து கரிக்காலி நோக்கி லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மோகன் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவரான கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (42) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.