லாரி டிரைவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்
அதிக பாரம் ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர்
பெண்ணாடம்,
விருத்தாசலம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை பெண்ணாடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டம் தளவாய் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு தொழிற்சாலையில் இருந்து சிமெண்டு ஏற்றி வந்த வெளி மாநில பதிவு எண் கொண்ட லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததும், தமிழகத்தில் லாரியை இயக்குவதற்கு உரிய அனுமதி பெறாததும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், அதிக பாரம் ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story