லாரி மோதி 6 மின்கம்பங்கள் முறிந்தது


லாரி மோதி 6 மின்கம்பங்கள் முறிந்தது
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் லாரி மோதி 6 மின்கம்பங்கள் முறிந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் லாரி மோதி 6 மின்கம்பங்கள் முறிந்தது.

மின்கம்பங்கள் முறிந்தது

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து வடரங்கம் செல்லும் சாலையில் குன்னம் கிராமத்தில் அரசின் மணல் குவாரிக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு எதிரே உள்ள விளை நிலங்களுக்கு மின்மோட்டாருக்கான மின்கம்பிகள் கான்கிரீட் மின்கம்பங்களில் சென்று கொண்டு இருக்கின்றன.

நேற்று புத்தூரிலிருந்து வடரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான ஒரு லாரி மிக வேகமாக சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் அப்படியே முறிந்து கீழே விழுந்தது. தொடர்ந்து உச்சிப்பகுதியில் இருந்து கம்பிகள் மற்ற மின்கம்பங்களை வேகமாக இழுத்த போது மீதமுள்ள ஐந்து மின்கம்பங்கள் உள்ளிட்ட ஆறு மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தன.

உயிர் சேதம் தவிர்ப்பு

மேலும் மின் கம்பிகளும் அறுந்து சாலை மற்றும் வயலில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி மற்றும் அரசூர் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்இணைப்பை உடனடியாக துண்டித்தனர். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தற்போது மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்துள்ள நிலையில் 6 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் நட்டு மின்சாரம் வழங்கும் முயற்சியில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து புத்தூரிலிருந்து கடுக்காய்மரம், குன்னம், பெரம்பூர், மாதிரவேளூர், சென்னியநல்லூர் மற்றும் வடரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் லாரிகள் அதிக வேகத்தை குறைத்து மிதமான வேகத்துடன் நிதானமாகவும் கட்டுப்பாட்டுடனும் சென்று வரும் வகையில் ஓட்டுநர்கள் கவனமாக லாரிகளை இயக்கி விபத்தை தவிர்க்க வேண்டும் என்று கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story