தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்


தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 ஏக்கர் பரப்பளவு

சீர்காழி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. மேலும் சீர்காழி நகர் பகுதியில் நீர் ஆதாரமாகவும் இந்த குளம் இருந்து வந்தது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக இந்த குளம் தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால் இந்த குளம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு குளத்தின் பரப்பளவு குறைந்து காணப்படுகிறது. மேலும் குளத்தை தூர்வாராததால் நீரை குளத்தில் சேமிக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் சீர்காழி நகர் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சீர்காழி நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தாமரைகுளம் ஆக்கிரமிப்பு

இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினால் இந்த குளத்தில் அதிக அளவில் நீரை சேமிக்க முடியும். இதனால் சீர்காழி நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.


Next Story