மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது


மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது
x

மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவிகா (வயது 55). இவருடைய மகள் வெள்ளத்தாய் என்பவரை பாளையங்கோட்டை, இலந்தகுளத்தை சேர்ந்த மருதமுருகன் (38) என்பவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மருதமுருகன் -வெள்ளத்தாய் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளைத்தாயை மேலப்பாட்டத்துக்கு அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நேற்று வெள்ளத்தாயும் அவருடைய தாயாரும் வீட்டில் இருந்த போது அங்கு வந்த மருதமுருகன், மனைவி மற்றும் மாமியாரை அவதூறாக பேசி, தாக்கி உள்ளார். இது குறித்து தேவிகா பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அலிததார். சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து பாண்டியன், வழக்குப்பதிவு செய்து மருதமுருகனை கைது செய்தார்.


Next Story