கல்லூரி மாணவரை தாக்கியவர் கைது


கல்லூரி மாணவரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே கல்லூரி மாணவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே நோம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் செல்வமணி (வயது 20). கல்லூரி மாணவர். இவரும், நண்பர் வடிவேல் முருகனும் அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சுந்தரபாண்டியனை(28) கேலி செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரபாண்டியன் மண்வெட்டியால் செல்வமணியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த செல்வமணி மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா வழக்கு பதிவு செய்து சுந்தரபாண்டியனை கைது செய்தார்.


Related Tags :
Next Story