விவசாயியை தாக்கியவர் கைது


விவசாயியை தாக்கியவர் கைது
x

விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கோடாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்கண்ணன்(வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் மணிவண்ணன்(29). விவசாயியான இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மயில் கண்ணன் பிரச்சினைக்கு உரிய இடத்தின் வழியாக பொக்லைன் எந்திரத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது எனது நிலத்தின் வழியாக எப்படி எந்திரத்தை எடுத்து வரலாம் என்று மணிவண்ணன் மயில் கண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மயில் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக்கட்டையால் மணிவண்ணன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மயில்கண்ணன் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தா.பழூர் போலீசில் மயில் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர்.


Next Story