தந்தையை தாக்கியவர் கைது
தந்தையை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி காலனியை சேர்ந்தவர் குமாரசாமி(வயது 61). இவரது மகன் சங்கர் (40). இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று தந்தை-மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த சங்கர் தனது தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமாரசாமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story