முதியவரை தாக்கியவர் கைது


முதியவரை தாக்கியவர் கைது
x

பாளையங்கோட்டை அருகே முதியவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவருக்கும், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஜெயசந்திரகுமாருக்கும் இடபிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பந்தபட்ட இடத்தில் சண்முகம் நின்று கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த ஜெயசந்திரகுமார் உள்ளிட்டோர் சண்முகத்திடம் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயசந்திரகுமாரை கைது செய்தனர்.


Next Story