முதியவரை தாக்கியவர் சிக்கினார்


முதியவரை தாக்கியவர் சிக்கினார்
x

முதியவரை தாக்கியவர் சிக்கினார்

திருநெல்வேலி

நெல்லை:

முன்னீர்பள்ளம் கொழுமடை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 72). இவர் கொழுமடை கக்கன் தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (40). கூலி தொழிலாளியான இவருக்கும், பால்ராஜிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று சங்கரலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் சென்று பால்ராஜை தாக்கி, அவரது வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரலிங்கத்தை கைது செய்தனர்.


Next Story