வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது


வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2022 12:03 AM IST (Updated: 24 Dec 2022 2:21 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள திருவாளப்புத்தூர் அழகன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விசுவநாதன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது23). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் வினோத் (23). இவர்களுக்கு இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத், வெங்கடேசனை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர், மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ைச பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.


Related Tags :
Next Story