தொழிலாளியை பாட்டிலால் தாக்கியவர் கைது


தொழிலாளியை பாட்டிலால் தாக்கியவர் கைது
x

தொழிலாளியை பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி சி.கே.கே.நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது38). கள்ளிப்பட்டி முருகையன் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (46). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இந்த நிலையில் சிவக்குமார் நேற்று முன்தினம் மாலை கள்ளிப்பட்டி காந்தி சிலை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு முருகேசன் வந்துள்ளார்.

அவரிடம் சிவக்குமார், எனது தந்தையை கடந்த வாரம் தகாத வார்த்தைகளால் பேசி ஏன் அடித்தீர்கள்? என்று தட்டி கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் தகாத வார்த்தைகளால் சிவக்குமாரை பேசி தாக்கியுள்ளார். மேலும் கீழே கிடந்த மது பாட்டிலால் சிவக்குமாரின் தலையில் அடித்தும், நெற்றி மற்றும் கன்னத்தில் கீறியும் உள்ளார். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சிவக்குமார் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story