கத்தியை காட்டி வழிப்பறி செய்ய முயன்றவர் கைது
கத்தியை காட்டி வழிப்பறி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கண்ணையன் மகன் ராமதாஸ். இவர் சம்பவத்தன்று தா.பழூர் திரவுபதி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த நபர் ராமதாசிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது அந்த நபர் தான் ரவுடி என்றும், கோடாலி மணிவண்ணன் என்று சொன்னால் அனைவரும் பயப்படுவார்கள் என்றும், தனது பெயர் தா.பழூர் போலீசில் ரவுடி பட்டியலில் உள்ளது என்றும் கூறி மிரட்டி, இருக்கும் பணத்தை எடுத்து தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து பயத்தில் ராமதாஸ் சத்தம் போட்டதால், அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். இதையடுத்து மணிவண்ணன், தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமதாஸ் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோடாலிைய சேர்ந்த நாகராஜனின் மகன் மணிவண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.