கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
x

காட்டுமன்னார்கோவில் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்:

காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, போலீஸ் ஏட்டுக்கள் நல்லதம்பி, சிவா ஆகியோர் வீராணநல்லூர் வடவாறு அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்ற ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வீராணநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 35)என்பதும், பிராயடி கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பணத்தை அவர் திருடிச்சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story