தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது


தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது
x

தா.பழூர் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரிவாள் வெட்டு

அரியலூர் மாவட்டம் உதயநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (32), கூலிதொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் (32), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மழை பெய்த போது கார்த்திக்கின் மனைவி லட்சுமி வீட்டின் முன்பு தேங்கி இருந்த மழை நீரை வடிகட்டுவதற்கு மண்ணை வெட்டி பக்கத்து வீட்டில் கொட்டி வைத்திருந்த கருங்கல் ஜல்லி மீது போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராஜாவுக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இரவு வேலை முடிந்த பின்னர் வீடு திரும்பிய கார்த்திக், ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த அரிவாளால் ராஜாவின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராஜா ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தனர். ராஜா கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக், அவரது மனைவி லட்சுமி, கார்த்திக்கின் தந்தை சீனிவாசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர். லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story