வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
மந்தாரக்குப்பத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அருகே கீழ்பாதியை சேர்ந்தவர் பிராங்கோ (வயது 33). சம்பவத்தன்று இவர் மந்தாரக்குப்பம் ஜெயப்பிரியா பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 போ் பிராங்கோவை ஆபாசமாக திட்டி, அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்து 200-யை பறித்ததாக தெரிகிறது. பின்னர் இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று பிராங்கோவை அவர்கள் மிரட்டி விட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிராங்கோ மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
அதில், பிராங்கோவிடம் பணத்தை பறித்து சென்றது அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மணி மகன் அசோக் (32), பெரியகுறிச்சியை சேர்ந்த துளசி என்பது தெரியவந்தது. இதையடுத்து அசோக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய துளசியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.