பெண்ணை வற்புறுத்தி தாக்கியவர் கைது


பெண்ணை வற்புறுத்தி தாக்கியவர் கைது
x

திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணை வற்புறுத்தி தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள வாணி காந்திநகரை சேர்ந்தவர் காயாம்பு. இவருடைய மகள் பொன்னுத்தாய் (வயது 43). திருமணம் ஆகாமல் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சந்தன மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த முனியசாமி (50) என்பவர் இன்னும் திருமணமாகாமல் தனியாக இருக்கிறாயே நான் உன்னை திருமணம் செய்துகொள்ளவா என்று கேட்டு கிண்டல் செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி அவதூறாக பேசி கீழே கிடந்த கம்பியை எடுத்து பொன்னுத்தாயை தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியல் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து முனியசாமியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story