கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியவர் கைது
கிருஷ்ணகிரி அருகே கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியவரை போலீசார் கைது செய்தனர். 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைது
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பொன்மலை கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மாந்தோப்பு பகுதியில் சிலர் இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள். இதில் ஒருவர் பிடிபட்டார். 4 பேர் ஓடி விட்டனர்.
பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் வாஞ்சி என்கிற சதீஷ்குமார் (வயது 29) என்பதும், கிருஷ்ணகிரி சத்ய சாய் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட நபர் மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப்பள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில், கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
கொள்ளையடிக்க திட்டம்
மேலும் அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. தப்பி ஓடிய பாஞ்சாலியூர் நியாமத் என்கிற அமாவாசை (21), லைன்கொல்லை சேது (22), ஷாருக்கான் என்கிற சமியா (25), வடிவேல் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.